வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (13/06/2018)

கடைசி தொடர்பு:18:30 (13/06/2018)

`காலா’ படத்துக்கு அதிகக் கட்டணம் வசூல்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

'திரைப்படங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 7-ம் தேதி வெளியானது. காலா திரைப்படத்துக்கு தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'திரையரங்குகளில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள்குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.