வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/06/2018)

'அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பேசவே முடியவில்லை'- நாய்க்கு நடந்த கொடுமையால் நெட்டிசன்கள் காட்டம்

'மனிதனின் கொடுர மனதை இது காட்டுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு என்னால் பேசவே முடியவில்லை'' என சமூக வலைத்தளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது.

'அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பேசவே முடியவில்லை'- நாய்க்கு நடந்த கொடுமையால் நெட்டிசன்கள் காட்டம்

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த நாய்மீது தார் ஊற்றி சாலை போட்டுள்ளனர். இதனால் நாய் இறந்துபோனது. 

நாய் மீது தார் ஊற்றி சாலை போட்ட அவலம்

 இந்த கொடூர சம்பவம், ஆக்ராவில் நடந்துள்ளது. நாய்மீது தார் ஊற்றி சாலை அமைத்தது போன்ற புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட, ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாயைக் கொன்றவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று சதார் போலீஸ் நிலையத்தையும் மக்கள் முற்றுகையிட்டனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரேஷ் பரேஷ் கூறுகையில், ''தாஜ்மகாலில் இருந்து சர்க்கியூட் ஹவுஸ் வரை புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும்போது, தெருநாய் ஒன்று படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அதை விரட்டிவிட்டு சாலை அமைக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அதன் மீதே தாரை ஊற்றியுள்ளனர். அதன்பிறகு, ரோடு ரோலரையும் அதன்மீது ஏற்றியுள்ளனர். நாய் அதே இடத்தில் இறந்துவிட்டது. பின்னர், நாயின் உடலை எங்கேயோ எடுத்து சென்று எறிந்துவிட்டனர். மனிதாபிமானமே இல்லாமல் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.  விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். 

'மனிதனின் கொடூர மனதை இது காட்டுகிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு என்னால் பேசவே முடியவில்லை''  என சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்துவருகிறது. சாலை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்தவர் தரப்பில் இருந்து, 'விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க