`திருக்கோயில் பாதுகாப்புப் படை' - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு


சட்டமன்றத்தில், தமிழக வளர்ச்சித்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அரசின்  கடந்தகால நடவடிக்கைகளைக் குறிப்பிடும் கொள்கைவிளக்கக் குறிப்பு தாக்கல்செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள கோயில் வளாகங்களில் மின்னணு பாதுகாப்பு உபகரணங்கள், மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமராக்கள், உறுதியான இரும்புக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பகல் மற்றும் இரவு நேரக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள், உலோகத்திருமேனிகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கப்பட்டு படப்பதிவு செய்யப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 11,512 பாதுகாப்பு அறைகள் உள்ளன எனவும், மேலும் பாதுகாப்பு அறைகள் தேவைப்படும் கோயில்களின் தகவல் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  களவு எச்சரிக்கை மணி பொருத்தும் திட்டத்தின் கீழ், 5 கோடி மைய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, `திருக்கோயில் பாதுகாப்புப் படை' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் 1000 இரண்டாம் நிலைக் காவலர்கள், 3000 முன்னாள் படை வீரர்கள் ஆகியோரை நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!