``எந்தப் பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது..!’’ - டிராஃபிக் ராமசாமி ட்ரெய்லர் | Traffic ramasamy movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (13/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (13/06/2018)

``எந்தப் பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது..!’’ - டிராஃபிக் ராமசாமி ட்ரெய்லர்

டிராஃபிக் ராமசாமி

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவரவிருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

 

 

க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்குப் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஜூன் 22-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி, ரோகிணி எனப் பலர் நடித்திருக்கிறார்கள். வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகப் போராளி டிபாஃபிக் ராமசாமியின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் விக்கியின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ’டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருக்கும்போதே அவரை கெளரவப்படுத்தியதற்கு நன்றி’ எனக் கமல், படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.