வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:00:00 (14/06/2018)

`சல்மானுக்கு பாதுகாப்பு' - கொலை மிரட்டல் எதிரொலி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் வந்ததையடுத்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலைசெய்ய, சம்பத் நெஹ்ரா என்ற ரவுடி சதித்திட்டம் தீட்டுவதாக ஹரியானா போலீஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மும்பை கேலக்ஸி அப்பார்ட்மென்ட்டில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெஹ்ரா கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான், 'இது புதிதல்ல; தொடர்ந்து இதுபோன்ற மிரட்டல்கள் வந்துகொண்டுதான் உள்ளன. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார். மேலும், இதுபோன்ற மிரட்டல்கள் தலைதூக்கும்போது, காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த 'ரேஸ் 3' திரைப்படம்  நாளை மறுநாள் வெளியாகிறது.