வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:07:17 (14/06/2018)

இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை கறுப்பு மையால் அழித்த டாக்டர் - வழக்கு பதிவு செய்த போலீஸ்!

இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாட்டை மட்டும் கறுப்பு மையால் அழித்ததோடு இந்தி, இந்து, இந்தியாவை மறுப்போம், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்போம் என்ற வாசகத்துடன் அடங்கிய படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் எலக்ட்ரோபதி டாக்டர் ஒருவர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து கும்பகோணம் மேற்கு போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாட்டை மட்டும் கறுப்பு மையால் அழித்ததோடு இந்தி, இந்து, இந்தியாவை மறுப்போம், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்போம் என்ற வாசகத்துடன் அடங்கிய படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார்  எலக்ட்ரோபதி டாக்டர் ஒருவர். அவர்  மீது  வழக்கு பதிவு செய்து கும்பகோணம் மேற்கு போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எலக்ட்ரோபதி டாக்டராகவும்,  தமிழ்த் தேசிய குடியரசு கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் வர இருக்கும். ஜூலை மாதம் 17-ம் தேதி கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் தமிழர் பாதுகாப்பு மற்றும் `தமிழர் தாயக மீட்பு' என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதாக அறிவித்திருந்தார்.

இதற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில்  `இந்தி, இந்து, இந்தியாவை மறுப்போம்',  `தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்போம்' மற்றும் தமிழர் விடுதலை, தமிழக விடுதலை, தமிழீழ விடுதலை எனும் வாசகத்துடன், இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை கறுப்பு மை பூசி அழித்ததோடு, தமிழ்நாட்டின் ஒரு கை விலங்கிட்டும், மற்றொரு கை இலங்கையுடன்  கை  கோத்தபடி இருக்கும்படி அச்சிட்டிருந்தார். அந்தப் படத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார். இந்தப் பதிவு பலருக்கும் பரவி வந்த நிலையில் காவல்துறையினருக்கும் சென்றுள்ளது.
 

டாக்டர் சிலம்பரசன்

உடனே யார் இவர் என போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸார் இந்திய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைக் கேள்விப்பட்ட சிலம்பரசன் தலைமறைவாகிவிட அவரை போலீஸார்  தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டவுடன் தான் எதற்காக இப்படிச் செய்தார் எனத் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க