வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:10:07 (14/06/2018)

புதிய பாடத்திட்டம்குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி... அமைச்சர் செங்கோட்டையன்!

புதிய பாடத்திட்டம்குறித்து அடுத்த மாதம் 15 நாள்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

``புதிய பாடத்திட்டம்குறித்து அடுத்த மாதம் 15 நாள்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் பனகல் மாளிகையில், முதன்மைக் கல்வி அலுவலகம் வாடகை இடத்தில் செயல்பட்டுவந்தது. அந்த அலுவலகம், எழும்பூர் மாநில மகளிர் பள்ளி வளாகத்தில் இருக்கும் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், மத்திய இடைநிலைக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், முன்னாள் எம்.பி., பாலகங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ``மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 4 வகுப்பறைகள் நிரந்தர முதன்மைக் கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. ப்ளஸ்-1, ப்ளஸ்-2 தேர்வில் மொழித்தேர்வுகள் இதுவரை 2 தாள்களாக நடைபெற்றது. இப்போது, ஒரே தாளாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் வரவேற்றிருக்கிறார்கள். விரைவில் சி.ஏ., பயிற்சி தொடங்கப்படும். திறன் பயிற்சி புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. புதிய பாடத்திட்டம்குறித்து அடுத்த மாதம் 15 நாள்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்’’ என்று செங்கோட்டையன் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க