அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, தயிர் சாதத்துடன் இனிப்பு! - நாராயணசாமியின் அசத்தல் திட்டம்

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, தயிர் சாதத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி

புதுச்சேரி சன்னியாசி குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு புதிய கட்டடங்கள், குடிநீர் இணைப்பு, விளையாட்டு உபகரணங்கள் என 32 லட்சம் ரூபாய் அளவிலான புனரமைப்புப் பணிகளைத் தனியார் தொண்டு நிறுவனம் செய்துகொடுத்தது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், புதிய பள்ளிக் கட்டடத்தின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி அரசு, கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்திய அளவில் நமது புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஒருசில தடைகள் உள்ளன. அந்தத் தடைகள் விரைவில் உடைத்தெறியப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்படும். வரும் காலங்களில், தொண்டு நிறுவனங்கள்மூலம் பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளைச் செய்வதற்கு உதவிகள் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் துவங்கப்பட உள்ளது. காரைக்காலில் 20 பள்ளிகள், புதுச்சேரியில் 40 பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1.25 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில், வரும் இரண்டு மாதங்களுக்குள் மாணவ,மாணவியர்க்கு சப்பாத்தி, தயிர் சாதம் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் இனிப்புடன் வழங்கப்படும்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!