உலகக் கோப்பை தொடக்கம்! - 1200 இங்கிலாந்து ரவுடி ரசிகர்கள் பாஸ்போர்ட் பறிப்பு

1200 ரவுடி ரசிகர்களின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடக்கம்! - 1200 இங்கிலாந்து ரவுடி ரசிகர்கள் பாஸ்போர்ட் பறிப்பு

மயம் பார்த்து ரஷ்யா செல்ல காத்திருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸை சேர்ந்த ரவுடி ரசிகர்கள் 1254 பேரின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டுள்ளது. 

ரவுடி ரசிகர்கள் பாஸ்போர்ட் பறிப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று ரஷ்யாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரஷ்ய அணி சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. எப்போதுமே இங்கிலாந்து ரசிகர்கள் பிற அணி ரசிகர்களுக்கும் போலீசுக்கும் தலைவலியாக இருப்பார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியில் எதிரணி ரசிகர்களை வம்பிழுப்பார்கள். தோற்றால் கோபத்தில் வன்முறையில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போதும் இவர்களால் வன்முறை வெடிக்கும். 

இந்த உலகக் கோப்பை போட்டியில் ரவுடி ரசிகர்களுக்கு முன்னரே செக் வைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்து 1254  ரசிகர்களின் பாஸ் போர்ட்டை பறித்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதியாட்டம் முடிந்த பிறகு ஜூலை 15-ந் தேதிக்கு பின்னரே மீண்டும் பாஸ்போர்ட் அவர்களிடத்தில் திருப்பி ஒப்படைக்கப்படும். 

பிரிட்டனின் 'டெய்லி ஸ்டார்' பத்திரிகை இங்கிலாந்து ரவுடி ரசிகர்கள் ரஷ்யா சென்று அங்குள்ள ரவுடி ரசிகர்களான ரஷ்யன் அல்ட்ராசுடன் சேர்ந்து மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை காரணம் காட்டி ரஷ்ய அரசு, ரவுடி ரசிகர்கள் ரஷ்யாவுக்குள் வருவதை தடுக்க இங்கிலாந்து அரசை கேட்டுக் கொண்டது. இதை தொடர்ந்து ரவுடி ரசிகர்களின் பாஸ்போர்ட்டை இங்கிலாந்து போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!