வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (14/06/2018)

கடைசி தொடர்பு:13:05 (14/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வரும்?- சீமான் கணிப்பு

'நியாயப்படி பார்த்தால், தீர்ப்பு 18 எம்.எல்.ஏ-க்களுக்கு  சாதகமாகவும், அரசுக்கு எதிராகவும் வரவேண்டும்'' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
 
சீமான்
 
கடந்த மே 19-ம் தேதி, திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் ம.தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக இன்று வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்தவர்கள் போராடினால், அவர்களின் குரலை  ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாத ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைக்கிறார்கள்.
 
மக்களுக்காகப் போராடும் எங்கள்மீது பொய் வழக்குப் பதிவுசெய்வது தொடர்கதையாக உள்ளது. சம்பவ இடத்தில் இல்லாத என் மீது பல வழக்குகள் போடுகிறார்கள். அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் மோதல் நடந்த அன்று, நான் சம்பவ இடத்திலேயே இல்லை. ஆனால், என்மீது வழக்கு போடப்படுகிறது.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு நியாயப்படி பார்த்தால், அரசுக்கு எதிராகத்தான் வர வேண்டும். ஆனால், எவ்வாறு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க