பி.எம்.டபிள்யூ காரில் வைத்து அடக்கம்! - தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகன்

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர் உடலை பி.எம்.டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்தப் படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. 

பி.எம்.டபிள்யூ

நைஜீரியாவின் அனம்பரா பகுதியைச் சேர்ந்தவர் அஸுபுகி. அப்பகுதியின் மிகப் பெரும் செல்வந்தர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், அஸுபுகியின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு இறந்தார். அவரது உடலைப் புதைப்பதற்கு முன்பாக, தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்தார் அஸுபுகி. இதற்காக புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்தச் சொகுசு காரில், இறந்த தந்தையின் சடலத்தை வைத்துப் புதைத்துள்ளார். இவரது இந்தச் செயல் அக்கம் பக்கம் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சொகுசு காரில் வைத்து அடக்கம் செய்யும் படங்களை 21,000-க்கும் அதிகமான முறை இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் அஸுபுகியின் செயலுக்குக் கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அஸுபுகி வாங்கிய சொகுசு காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!