`எங்கள் கூட்டத்தால் யாரும் பாதிக்கக் கூடாது’ - மார்க்சிஸ்ட் கட்சிக்குக் குவிந்த பாராட்டு

சிபிஎம் கட்சியினர் நடத்திய நிதியளிப்பு பிரச்சார பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் அருகே இருந்த தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாத வகையில் வழியை விட்டு மேடை அமைத்து கூட்டம் நடத்தினர் அக்கட்சியை சேர்ந்தவர்கள்.ரம்ஜான் நேரம் என்பதால் தொழுகைக்கு வருபவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்பதற்காகவும் இப்படி செய்யபட்டது என தெரிவித்தனர். இதனை நெகிழ்ச்சியோடு அனைவரும் பாராட்டி சென்றனர்.

சிபிஎம் கட்சியினர் நடத்திய நிதியளிப்பு பிரசார பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் அருகே இருந்த தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாத வகையில் வழியை விட்டு மேடை அமைத்து கூட்டம் நடத்தினர் அக்கட்சியை சேர்ந்தவர்கள்.ரம்ஜான் நேரம் என்பதால் தொழுகைக்கு வருபவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்பதற்காகவும் இப்படி செய்யபட்டது என தெரிவித்தனர். இதனை நெகிழ்ச்சியோடு அனைவரும் பாராட்டி சென்றனர்.

மார்க்சிஸ்ட்

தஞ்சாவூரில் சிபிஎம் கட்சியின் நிதியளிப்பு பிரசார பொதுக்கூட்டம் அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதற்காக போராடுவோம் தமிழகமே, வதைக்கப்படுகிறது மக்கள் வாழ்க்கை. விண்ணில் பறக்கிறது விலைவாசி, கண்ணில் படவில்லை. வேலைவாய்பு போன்ற வாசகத்துடன் அக்கட்சியினர் தஞ்சாவூர் நகரம் முழுவதும் பிளெக்ஸ் வைத்திருந்தனர். தொடக்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் டிஜிட்டல் இந்தியாவை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த பொதுக்கூட்டம் ஆபிரஹாம் பண்டிதர் சாலை என்ற இடத்தில் நடைபெற்றது. எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இந்த பகுதியில் தான் அனுமதி தருவார்கள் போலீஸார். இதேபோல் சிபிஎம் கூட்டத்திற்கும் அந்த இடத்திலேயே அனுமதி கொடுத்தனர்.

பொது மக்களுக்கு வழிவிட்டு கூட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர்

அந்த இடத்தில் பழைமை வாய்ந்த சாஹெப் வலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதங்களை கடந்து எல்லோரும் வருவதுடன் தங்கள் பிரச்னைகள் தீர வேண்டி கொண்டு செல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த தர்காவாக விளங்கி வருகிறது. மேடை அமைக்கப்படும் இடத்துக்கு வலது புறத்தில் 50 மீட்டர்  தூரத்தில் உள்ளடங்கி இருக்கிறது இந்த தர்கா. மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தினால் தர்காவுக்கு செல்லும் வழியை மறித்து தொண்டர்கள் உட்கார்வதற்கு நாற்காலிகளை போட்டு விடுவார்கள். இதனால் தர்காவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆனால் சிபிஎம் கட்சியினர் தர்காவுக்கு செல்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பெரிய அளவில் இடைவெளி விட்டு போட்டிருந்தனர். இதனை அனைவரும் பாராட்டி சென்றனர்.

சாஹெப் வலியுல்லா தர்கா

இது குறித்து அந்த கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசினோம். கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்ட கூட்டம் என்பதால் பெரிய அளவில் கூட்டம் வந்தது. இது ரம்ஜான் நேரம். முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் தொழுவ வருவார்கள். அவர்களுக்கும் மேலும் மதங்களை கடந்து இங்கு வரும் மக்களுக்கும் எங்க கூட்டத்தால் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என நினைத்தோம். அதன்படி அவர்கள் தர்காவுக்கு வந்து செல்வதற்காக இடைவெளி விட்டிருந்தோம். இங்கு வந்தவர்கள் இதை கண்டு பாராட்டியும் சென்றதோடு நன்றியும் சொன்னார்கள். இனி இந்த இடத்தில் கூட்டம் நடந்தால் இப்படிதான் ஏற்பாடு செய்வோம்'' என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!