`ரஜினி சாரோடு படம் முழுக்க ட்ராவலாகப்போறேன்’ - `முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் குஷி

`காலா' படத்தின் ரிலீஸின்போது கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பமானது. தற்போது டார்ஜிலிங்கில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களும் வெளியாகிவருகிறது. 

ராம்தாஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், ரஜினிக்கு ஜோடியாகச் சிம்ரன் நடிக்கிறார் என்றும் பாபி சிம்ஷா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் எனப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளன. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், தற்போது `முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் இணைந்திருக்கிறார் எனத் தகவல்கள் வந்தன.

இது குறித்து அவரிடம் கேட்டப்போது, ``ஆமாங்க, நான் ரஜினி சார் படத்தில் நடிக்கிறேன். படம் முழுக்க ரஜினி சாரோடு ட்ராவல் ஆகுற மாதிரியான கேரக்டர்னு சொல்லியிருக்காங்க. செம குஷியா இருக்கு’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!