கேரளாவில் மற்ற மொழிப் படங்களுக்கு 15% கூடுதல் வரி!

ஒரு மாநிலத்தில் மற்ற மொழிப்படங்கள் வெளியானால் நடைமுறையில் இருக்கும் கேளிக்கை வரியைவிட சற்று கூடுதலாக விதிப்பது வழக்கம். ஆனால், கேரளாவில் வெளியாகும் மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 15% கூடுதலாகக் கேளிக்கை வரி விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழியில் உள்ள டாப் ஹீரோக்களின் படங்கள்தான் கேரளாவில் வெளியாகும். 

வரி

அதனால், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் ஜி.எஸ்.டி அல்லாமல் கேளிக்கை வரியாக கேரள அரசுக்கு 15% கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்குக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "15 சதவிகிதம் கூடுதல் வரி செலுத்துவதன் மூலம் தயாரிப்பாளர்கள் 40 முதல் 50 சதவிகிதம் வரை மட்டுமே லாபம் அடைவார்கள்" என்று கூறியுள்ளார். கேரளாவில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் போன்றவற்றை கேரள அரசே ஒரு வாரியம் அமைத்து அதைக் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!