நடுக்கடலில் பற்றி எரிந்த இந்திய சரக்குக் கப்பல்! 11 பேர் மீட்பு; 11 பேர் தவிப்பு

இந்தியக் கடற்படையின் எஸ்.எஸ்.எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட  தீ விபத்திலிருந்து இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பல்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான எஸ்.எஸ்.எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பல் இன்று அதிகாலை வங்காள விரிகுடா கடல் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றியது. இந்தக் கப்பலில் மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மேற்கு வங்க ஹால்தியா பகுதியிலிருந்து இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ராஜ்கிரண் என்ற மீட்புக் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கப்பல் இன்று காலை 8 மணியளவில் சம்பவஇடத்தை அடைந்தது.

இந்தத் தீ விபத்திலிருந்து இதுவரை 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் கப்பலில் சிக்கியுள்ளனர். மிகவும் மோசமான கடலின் நிலை மற்றும் வலுவான காற்றினால் தீ வேகமாக மற்ற இடங்களுக்குப் பரவி வருகிறது. இதனால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புக் கப்பல் விபத்துக் கப்பலை அடையும் போதே கொல்கத்தா கப்பல் 70 சதவிகிதம் எரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!