`நள்ளிரவுடன் தடைக்காலம் முடிகிறது’ - மீனவர்களை அச்சுறுத்தும் காற்று

Fishermen

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாள்கள் விசைப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள 1,500 விசைப் படகுகளும் 3,500 பைபர் படகுகளும் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குக் கடந்த 60 நாள்களாக மீன்பிடிக்கப் போகவில்லை. இந்தக் காலகட்டத்தில் மீனவர்கள் தங்கள் விசைப் படகு மற்றும் பைபர் படகுகளைப் பழுது நீக்கல், மீன்பிடி வலைகளைச் சரி செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர்.  

Fishermen

இன்று (14.6.2018) நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைவதால் கடலுக்கு மீன்பிடிக்க முன்னேற்பாடாக ஐஸ் கட்டி மற்றும் குடிநீர், தேவையான உணவுப் பொருள்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், தென்மேற்குப் பருவ காற்று தீவிரமடைந்து வருவதன் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் அச்சத்தில் கடலுக்குள் செல்வதா, வேண்டாமா என்று காத்திருக்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!