வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (15/06/2018)

கடைசி தொடர்பு:12:32 (15/06/2018)

அமெரிக்காவின் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் சென்னைப் பெண்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் சென்னைப் பெண்!

மெரிக்காவின் புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவராகச் சென்னையைச் சேர்ந்த திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இந்தியர் நியமிக்கப்படுவதும் பெண் ஒருவர் இந்த பதவியில் அமர்வதும் இதுவே முதன்முறை.

ஜெனரல் மோட்டார்ஸில் உயர் பதவியை எட்டிய திவ்யா

அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ். இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக (corporate finance ) இதுவரை திவ்யா இருந்து வந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதித்துறைத் தலைவராக இருந்த ஸக் ஸ்டீவன்னன் அடுத்த மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதித்துறை தலைவராகத் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள மேரி பாராவும் திவ்யாவும் ஒரே சமயத்தில் ஆட்டோ மொபைல் துறைக்குள் நுழைந்தவர்கள் ஆவார்கள். 2014-ம் ஆண்டு மேரி பாரா ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் ஆனார். தற்போது, 39 வயதான திவ்யா ஜெனரால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் இத்தகைய உயர் பதவியைப் பெற்ற இரு பெண்களும் இவர்கள்தான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படித்த பின், 22 வயதில் அமெரிக்கா சென்ற திவ்யா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். டெட்ராயிட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த மோட்டார்ஸ் நிறுவனத்தில் 25 வயதில் சேர்ந்து படிப்படியாக இத்தகைய உயர் பதவியை எட்டியுள்ளார். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க