வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:00:30 (15/06/2018)

'கடும் வெயிலில் குளிர்கிறது!' - அரியானாவில் இப்படியும் ஒரு மனிதர்

"கொளுத்தும் வெயில் காலங்களில் குளிர்கிறது' எனக்கூறி போர்வை உடுத்தி நெருப்பில் குளிர் காய்கிறார் அரியானாவைச் சேர்ந்த மனிதர் ஒருவர். ' பருவநிலை மாற்றத்துக்கு எதிர்வினையாக அந்த மனிதர் உடலில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்கின்றனர் மருத்துவர்கள். 

அரியானா மனிதர்

அரியானா மாநிலத்தைப் பொறுத்தவரையில், கோடைக்காலங்களில் சராசரியாக 44 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டியெடுக்கும். ஆனால், இப்படிப்பட்ட வெயிலிலும் தனக்கு மிகவும் குளிர்வதாகக் கூறி போர்வையைப் போர்த்திக் கொண்டு, நெருப்பூ மூட்டி குளிர்காய்கிறார் டிரோலி என்னும் கிராமத்தைச் சேர்ந்த சாந்த்ராம் என்பவர். கோடைக் காலத்தில் குளிர்வதுபோல், குளிர் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதாகக் கூறி, நிறைய ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களைக் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இவரது இந்தச் செயல், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

`சாந்த்ரா சிறுவயதில் இருந்தே இப்படியான வினோத பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வருகிறார்' என்கின்றனர் டிரோலி மக்கள். இதுகுறித்துப் பேசும் டாக்டர் பிரதாப் ஷா, `உடலில் உள்ள தெர்மோஸ்டாட் மையத்தில் ஏற்படும் ஹைப்போதலாமஸ் குறைபாட்டால், பருவநிலை மாற்றத்துக்கு, எதிர்வினையாக சாந்த்ராம் உடலில் இவ்வாரான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்கிறார்.