`அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்கமுடியாது’ - கமல் ட்வீட்!

ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என நடிகர் கமல் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என நடிகர் கமல் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலைச் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், ஆளுநர் சந்திக்க மறுக்கும் நிலையில் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் 3 பேரும் கவர்னர் அலுவலகத்திலே போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே ஆளுநர்கள், அரசின் முடிவுகளில் தலையிடுவதாகவும், மாநில அரசை அலட்சியப்படுத்துவதாகவும் பா.ஜ.க அல்லாத ஆட்சி அமைந்திருக்கும் மாநிலங்களிலிருந்து  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதே நிலை தமிழகம் மற்றும் புதுவையில் நீடித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள, நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், `ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் முடிவுகளில் தலையிடுவதை ஏற்கமுடியாது; டெல்லியில் நடப்பதைப் போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. மாற்றத்தை விரும்புகிற மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். கமலின் இந்தப் பதிவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், `டெல்லி மக்களுக்காக வேலை செய்ய பிரதமர் அனுமதிப்பார் என நான் நம்புகிறேன். மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்கப்படக் கூடாது' இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!