வெளியிடப்பட்ட நேரம்: 01:05 (15/06/2018)

கடைசி தொடர்பு:01:05 (15/06/2018)

ரம்ஜானுக்காக இன்று அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து -  தமிழக அரசு அறிவிப்பு!

இன்று ரம்ஜானுக்காகப் பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்தது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ரம்ஜான்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். பசியின் வலிமையை உணர்ந்து பசித்தவர்களுக்கு கொடையளிக்கும் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான நோன்பு கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. இதற்கிடையே, ரம்ஜானுக்கான பெருநாள் பிறை தமிழகம் எங்கும் இன்று தெரியாததால் நாளை, அதாவது சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். 

அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் ரம்ஜானுக்காக இன்று பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்தது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் கொண்டாடப்படுவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க