வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (15/06/2018)

கடைசி தொடர்பு:13:46 (15/06/2018)

`இப்போதும் எப்போதும் நீங்கள் மட்டும்தான்!’ - அனிருத் நெகிழ்ச்சி 

இசையமைப்பாளர் அனிருத், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து `என் உத்வேகம்... இப்போதும் எப்போதும்’ என்று நெகிழ்ந்துள்ளார்.

அனிருத்
 

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விருது வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடந்து முடிந்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் கையால் அனிருத் விருது பெற்றிருக்கிறார். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து `எப்போதுமே என் உத்வேகம் இவர் மட்டும்தான்’ என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அனிருத் நேற்று மாலை வெளியிட்ட `கோல மாவு கோகிலா' படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள 'கோலமாவு கோகிலா' ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடலான `ஒரே ஒரு ஊரில்...’ எனும் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதுதான் ஹைலைட். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் முன்னர் வெளியாகி அனிருத்துக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. முக்கியமாக யோகி பாபு, நயன்தாராவை துரத்தித் துரத்தி காதலிக்கும் `கல்யாண வயசு’ பாடல் செம்ம வைரலானது. அந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

நேற்று மாலை வெளியான மூன்றாவது பாடலின் மேக்கிங் வீடியோவுக்கும்,  நல்ல ரீச் கிடைத்துள்ளது.  `ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு..’  என விக்னேஷ் சிவன் அனிருத்தின் அருகின் நின்று வரிகளை வாசிக்க, இசையமைத்துப் பாடுகிறார் அனிருத். மேக்கிங் காட்சிகளை உற்சாகமாகப் பகிர்ந்துள்ள அனிருத்,  `இது விக்னெஷ் சிவன் எழுதியிருக்கும்  30-வது பாடல்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

 

 


நீங்க எப்படி பீல் பண்றீங்க