மோடி வீட்டை வட்டமடித்த பறக்கும் தட்டு உண்மையா? #UFO

மோடி

கடந்த ஜூன் 7-ம் தேதி, ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி டெல்லியில் அரங்கேறியுள்ளது. எப்போதும் அமெரிக்காவை மட்டுமே கண்காணிக்கும் வேற்றுக் கிரகவாசிகள், இந்த முறை இந்தியாவைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். கேட்பதற்கே விசித்திரமாக இருக்கிறதல்லவா. ஆம், கடந்த ஜூன் 7-ம் தேதி இரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு ஒன்று பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ குடியிருப்பான லோக் கல்யாண் மார்ஃகில் வட்டமிட்டுக்கொண்டிருந்திருக்கிறது. பிரதமரின் குடியிருப்பைச் சுற்றி 2 கி.மீ பரப்பளவுக்கு 'நோ ஃபிளை ஸோனாக' அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை அப்போது பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர் டெல்லி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே தேசியப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, டெல்லி விமானநிலைய அதிகாரிகள் மற்றும் டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் பிரிவு ஆகியன களத்தில் இறங்கி, அந்தப் பறக்கும் பொருளுக்கான தேடுதல் வேட்டையில் இறங்கின. ஆனால், அதற்குள் அந்தப் பறக்கும் பொருள் மாயமாய் மறைந்திருந்தது. தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சுற்றளவு பாதுகாப்பு அதிகாரி, பயப்படும் அளவுக்கு ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய டெல்லி சிறப்பு காவல் ஆனையர் தீபேந்திர பதக், இந்த நிகழ்வை உறுதிசெய்ததுடன் பாதுகாப்புக் காரணங்கள் கருதி இது சம்பந்தமாக வேறு ஏதும் தகவல்கள் தெரிவிக்க இயலாது என மறுத்துவிட்டார். 

"மோடியின் ஃபிட்னெஸ் சேலஞ்சை படம் பிடிக்க வந்த டிரோனாக இருக்கும் பாஸ்" என ட்விட்டர்கள் இதையும் கலாய்த்து விட்டது தனிக்கதை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!