எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும்..! ஜெயக்குமார் சூசகம் | TN Minister Jayakumar said about T.T.V.Dinakaran faction MLAs

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (15/06/2018)

கடைசி தொடர்பு:17:35 (15/06/2018)

எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும்..! ஜெயக்குமார் சூசகம்

தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் திரும்ப வந்தால், அவர்களைச் சேர்த்துக்கொள்வது பற்றி கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'இதுவரை துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகம் வீழ்ந்ததாகத்தான் வரலாறு உண்டு. தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க அரசு செயல்பட்டுவருகிறது.

அ.தி.மு.க அரசு தொடரக் கூடாது என்று நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. மாற்றான் தோட்டமாக இருந்தாலும் அவர்களை மதிக்கும் பண்பைப் பெற்றவர்கள் நாங்கள். தினகரனையோ அவர்களைச் சார்ந்தவர்களையோ ஒருபோதும் கட்சியில் சேர்க்க மாட்டோம். தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் திரும்பினால், கட்சியில் சேர்ப்பது பற்றி கட்சித் தலைமை முடிவு எடுக்கும்' என்று தெரிவித்தார்.