`தமிழகத்துக்கு 10 டி.எம்.சி நீர் தருவதில் பிரச்னை இல்லை’ - மதுரையில் குமாரசாமி பேட்டி

குமாரசாமி

``காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக் குழுவில் சொல்லப்பட்டுள்ள ஜூன் மாதத்துக்கான தமிழகத்துக்குத் தர வேண்டிய 10 டி.எம்.சி நீரைத் தருவதில் இந்தப் பருவமழைக் காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இல்லை'' என்று கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "கர்நாடகாவில் உள்ள அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து, நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், நேற்று கர்நாடகப் பாசனத்துறை அதிகாரிகளை அழைத்து, கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். 20,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலை தொடரும். இந்தப் பருவமழைக் காலம் பிரகாசமாக உள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக் குழுவில் சொல்லப்பட்டுள்ள ஜூன் மாதத்துக்கான தமிழகத்துக்குத் தர வேண்டிய 10 டி.எம்.சி நீரைத் தருவதில் இந்தப் பருவ மழைக் காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இல்லை. இரு மாநில விவசாயிகளும் மகிழ்வாக இருக்கும் நிலை உருவாகியுள்ளன. கடவுள் அருளால் இரு மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் இந்தப் பருவமழை சுமுகமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இனி கவலை வேண்டாம்'' என்றார். 18 எம்.எல்.ஏ தொடர்பான பிரச்னைக்குக் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டு குமாரசாமி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!