வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (15/06/2018)

கடைசி தொடர்பு:15:15 (17/06/2018)

`கோப்பையுடன் போஸ்!’ - ஆப்கானிஸ்தான் வீரர்களை நெகிழவைத்த இந்திய அணி #ViralVideo

`கோப்பையுடன் போஸ்!’ - ஆப்கானிஸ்தான் வீரர்களை நெகிழவைத்த இந்திய அணி #ViralVideo

பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி வென்ற பின்னர் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

கோப்பையுடன் இரு நாட்டு வீரர்கள்

Photo Credit: BCCI

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்டில் இந்திய அணியுடன் விளையாடியது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2 நாள்களில் முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 474 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்தை பாலோ ஆன் பெற்றது. இதைத் தொடர்ந்து 2 வது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 103 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டிக்குப் பின்னர் வெற்றிக் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களையும் அழைத்து, அவர்களை இந்திய வீரர்கள் நெகிழச் செய்தனர். சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



வீடியோவைக் காண இங்கு க்ளிக் செய்யுங்கள்