கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு வரி ஏய்ப்பு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை!

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து உலகின் ஹீரோ என்று அழைக்கப்படுபவர். போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணிக்காகவும், ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்.

கிறிஸ்ரியானோ ரொனால்டோ

கால்பந்து விளையாட்டு, விளம்பரங்கள் மூலம் பல கோடிகள் வருமானம் ஈட்டும் அவர், பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், அதற்கான தண்டனையை போர்சுக்கல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரி ஏய்ப்புக் குற்றத்துக்காக ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.149 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதை ரொனால்டோவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு நடந்தது. ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா ஆறு மாதங்கள் என 2 ஆண்டுகள் சிறை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் நாட்டுக்காக ரொனால்டோ விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!