வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (16/06/2018)

கடைசி தொடர்பு:08:45 (16/06/2018)

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்! - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்குப் பருவக்காற்று ஈரப்பதத்துடன் வீசிய காரணத்தாலும்,  வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. அதே நிலை இன்றும் நீடிப்பதால் மழை தொடரும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். நெல்லை, கோவை , தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது'  என்று குறிப்பிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க