மார்பளவு வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டுகள்

மார்பளவு தண்ணீரில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மார்பளவு வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டுகள்

ணிப்பூரில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மணிப்பூர் அரசு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மணிப்பூர் மாநில வெள்ளத் தடுப்புத்துறைச் செயலாளராக உள்ள திலீப் சிங் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதோடு, தன் பணி முடிந்துவிட்டது என்று  கருதவில்லை. தானும் நேரடியாக களம் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டார். 

வெள்ளத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி

இம்பால் நகரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி திலீப்சிங், மார்பளவு வெள்ளத்தில் நின்று மீட்புப் பணியில் ஈடுபட, அவரின் அர்ப்பணிப்பு உணர்வு மணிப்பூர் மக்களை வியக்க வைத்தது. வெள்ளத்தில் மார்பளவு தண்ணீரில் திலீப் சிங் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து திலீப் சிங்குக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கின. 

மணிப்பூர் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் லெட்போ ஹாக்கிப் திலீப்சிங்கை வெகுவாக பாராட்டினார். பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ``வெள்ளத்தில் சிக்கிய சாமானிய மக்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரியின் செயல் பாராட்டுக்குரியது'' என்று ட்விட் செய்துள்ளார். இவரைப் போல ஏராளமானோர் திலீப் சிங்கை பாராட்டி வருகின்றனர். 

மணிப்பூர் முதல்வர் நாங்தொம்பன் பைரன் இந்த ஐ.ஏ .எஸ் அதிகாரியின் புகைப்படத்தை வெளியிட்டு ``மணிப்பூர் வெள்ளம் கட்டுக்கடங்காமல் போனது. முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள்,  பாதுகாப்புப் படையினர் அனைவருமே களத்தில் உள்ளோம்'' என்று ட்வீட்  செய்துள்ளார். 

மணிப்பூரில் வெள்ளம் காரணமாக தலைநகர் இம்பால் உள்ளிட்ட நகரங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!