கவர்னர் ஒப்புதலுக்கு சிண்டிக்கேட் ஆவணங்களை அனுப்ப உள்ளது..! காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மான நகல் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. லயோனல் அந்தோணிராஜ், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அவரை அப்பொறுப்பிலிருந்து உடனே ஆளுநர் நீக்குவாரா என்ற கேள்வியைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் துணை வேந்தர் இல்லாத நிலையில் பல்கலை நிர்வாகத்தை வழி நடத்தவும்., புதிய துணைவேந்தர் தேர்வு செய்வது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 அலுவல்சார் சிண்டிகேட் உறுப்பினர்களில் பாரி பரமேஸ்வரன்,  லில்லிஸ் திவாகரன்,ராமகிருஷ்ணன், உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பதிவாளர் சின்னையா , தேர்வுத்துறை கன்ட்ரோலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிண்டிகேட் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!