தேர்தலுக்காக மதம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு!

தேர்தல் ஆதாயத்துக்காக மதம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், பாஜகவைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், 'தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

பாஜக

இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. 

அதன்பிறகு அந்த மசோதாவைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்த போதும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடவேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!