வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (17/06/2018)

கடைசி தொடர்பு:15:46 (17/06/2018)

மது போதையில் இருந்த கூலித் தொழிலாளி கழுத்தறுத்து கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கூலித் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கூலித் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூலித்தொழிலாளி கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (45). கூலித்தொழிலாளியான இவருக்கு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவரது மனைவி விவகாரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த ஜோன்ஸ் முழு நேரமும் மதுவுக்கு அடிமையானதுடன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தோட்டத்தில் இன்று கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி கொலை

சம்பவம் நடந்த பகுதி மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஸ்டாலின் ஜோன்ஸ்-க்கு யாராவது மது வாங்கி கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது பெண்களுடனான தொடர்பில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.