தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி நாட்டுப்படகு! - போலீஸ் விசாரணை.

 தனுஷ்கோடி அருகே கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியது. இந்த படகினை கைபற்றிய போலீஸார் படகு தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தனுஷ்கோடி அருகே கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதைக் கைப்பற்றிய போலீஸார், படகு தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி நாட்டுப்படகு

தென்மேற்கு பருவமழை மற்றும் மேலடுக்கு வழிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் வழக்கத்தினை விட அதிகமாக வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் கடல் மட்டத்திலிருந்து 5 அடி வரை எழும்புகின்றன. இதனால் இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருந்தது.
 இந்நிலையில் இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்த நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியது. 35 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த படகு  2 எஞ்சின்கள்  மற்றும் டீசல் கேன்களுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை தென்கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், படகினை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகு காற்றின் வேகத்தால் நங்கூரத்தை அறுத்து கொண்டு வந்ததா அல்லது மீனவர்கள் இப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் விபத்து ஏதும் ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டதா என தெரியாத நிலையில், போலீஸார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!