'தாடி' பாலாஜியைத் தொடர்ந்து அவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்! | Balaji's wife Nithya enters Bigg boss house

வெளியிடப்பட்ட நேரம்: 22:43 (17/06/2018)

கடைசி தொடர்பு:22:43 (17/06/2018)

'தாடி' பாலாஜியைத் தொடர்ந்து அவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்!

அனைவரும் எதிர்பார்த்தது போலவே அடுத்த போட்டியாளராக தாடி பாலாஜியின் மனைவி நித்யா பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார். 

நித்யா - பிக் பாஸ்

ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கும் பாலாஜிக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் இருவரும் ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். கமல் நடத்தி வரும் மய்யம் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். அது மட்டுமின்றி நித்யா பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'எப்படியாவது என் மனைவியோட சேருவேன்' என நம்பிக்கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தாடி பாலாஜியைத் தொடர்ந்து இவரும் தனது குழந்தையை கொஞ்சிவிட்டு பிக் பாஸ் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

டேனியல், சென்ராயன், பொன்னம்பலம், தாடி பாலாஜி என இவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க, ஹாய் பாலாஜி எப்படி இருக்கீங்க என கேஷூவலாக அவர்களிடையே தன்னை அறிமுகப்படுத்திகொண்டார், தாடி பாலாஜியின் மனைவி நித்யா.