வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (18/06/2018)

கடைசி தொடர்பு:07:59 (18/06/2018)

அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை..! மருத்துவர்கள் சங்கத்தில் தீர்மானம்

அரசு மருத்துவர்களை பற்றி முக நூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வளை தளங்களில் தேவையற்ற அவதூறு பரப்புவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவமனைப் பாதுகாப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும்.

அரசு மருத்துவர்களைப் பற்றி முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தேவையற்ற அவதூறு பரப்புவர்கள் மீது தமிழக  அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவமனைப் பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெய்வேலி

நெய்வேலியில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க 11-வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் டாக்டர் லட்சுமிநரசிம்மன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் டாக்டர் சுவாமிநாதன் முன்னிலையில் நடந்தது. இதில் அரசு மருத்துவத் துறையைக் காப்பாற்ற அரசு மருத்துவர்களுக்கான சர்வீஸ் கோட்டா 50 சதவிகிதத்தை மீண்டும் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களை பற்றி முக நூல், வாட்ஸ்அப்  போன்ற சமூக வலைதளங்களில் தேவையற்ற அவதூறு  பரப்புவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவமனை பாதுகாப்பு  சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். காலியாக உள்ள இணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.