குமரி சிற்றார்-2 அணையை நீந்தி கடக்கமுயன்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கினார்!

சிற்றார்-2 அணையின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு நீந்திச்செல்ல முயன்ற இளைளைஞர் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிற்றார்-2 அணையின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு நீந்திச்செல்ல முயன்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கியச் சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிற்றாறு-2

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. சிற்றார் -1, சிற்றார் -2, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளன. இந்த நிலையில், குலசேகரம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜூ அவரின் நண்பர்களுடன் நேற்று சிற்றார்-2 அணைக்குச் சென்றுள்ளார். நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அணைப்பகுதியை சுற்றிப் பார்த்திருக்கிறார்கள்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ராஜூ அணையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு நீந்திவருவதாக நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அணையின் மறுபகுதிக்குச் சென்று ராஜூவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், அணையின் பாதிதூரத்தை கடந்ததும் ராஜூ நண்பர்களை நோக்கி கை அசைத்துள்ளார். ஏதோ ஆபத்து என நினைத்த நண்பர்கள் கரையோரமாக சென்று பார்க்க முயன்றனர். அதற்குள் ராஜூ தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்தனர். ஆனால், தங்களுக்கு உத்தரவிட அதிகாரி இல்லை என கூறி தேடும் பணியை தாமதப்படுத்தினர். இதற்கிடையில், இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி தொடங்கப்படவில்லை. இதுகுறித்து கடையாலுமூடு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் இளைஞரை தேடும் பணி தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!