ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது!

ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று கந்தக அமிலக் கிடங்கில் சிறிதளவு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதை முழுமையாக அப்புறப்படுத்திடும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன வாயு வெளியாகிறது என்ற தகவலைத் தொடர்ந்து சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில்
நேற்று மாலை 4.10 மணிக்கு ஆலைக்குள் சென்று  6.15 மணி வரை ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக  நேற்று மாலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில் சிறிது கசிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இன்று முழுமையாக கசிவு  சரிசெய்யப்பட்டு அகற்றப்படும். மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை" என தெரிவித்தார். 

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், தாசில்தார்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஆலைக்குள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கந்தக அமில குடோனில் உள்ள கந்தக அமிலத்தின் இருப்பு எவ்வளவு லிட்டர் உள்ளது. அதில், அமிலக் கசிவு எவ்வளவு லிட்டர் உள்ளது. அதை எவ்வாறு பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி அழிப்பது என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து அதை அப்புறப்படுத்தும் பணியைச் செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!