ஆட்சி மாற்றத்தை தடுக்கவா நேரம் மாற்றம்?- நெல்லையப்பர் கோயில் விவகாரத்தில் மழுப்பல் பதில்

https://www.vikatan.com/news/tamilnadu/122824-local-holiday-announced-for-nellai-district.html

நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக நேர மாற்றத்துக்கு நிர்வாக அலுவலர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். 

நெல்லையப்பர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 27 இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கான நேர மாற்றம், அவசரகதியில் நடந்த பாலாலயம் போன்றவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆட்சி மாற்றம் ஏற்படாமலிருக்க திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகத்தின் நேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நெல்லை வழக்கறிஞர் பிரம்மா ஆர்.டி.ஐ. மூலம் கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு நெல்லையப்பர் கோயில் நிர்வாக அலுவலர் பதிலளித்துள்ளார். 

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அரசு வழங்கிய நிதித் தொகை எவ்வளவு என்ற விவரம் தருக? 

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசிடமிருந்து எந்தவித நிதித் தொகையும் பெறவில்லை.

 கும்பாபிஷேகத்துக்குத் தனியார்களிடம் வசூல் செய்யப்பட்ட நிதித் தொகை எவ்வளவு என்ற விவரம் தருக? 

 கும்பாபிஷேகத்துக்குத் தனியார்களிடமிருந்து எந்தவித நிதியும் வசூல் செய்யப்படவில்லை. 

 கும்பாபிஷேகத்துக்கு என்னென்ன வகையில் என்னென்ன பொருள்கள் நன்கொடையாகப் பெறப்பட்டது என்ற விவரம் தருக?

 கும்பாபிஷேகத்துக்கு நன்கொடையாகப் பொருள்கள் எதுவும் பெறப்படவில்லை.

 கும்பாபிஷேகப் பணிகள் செய்வதற்கு எந்தெந்தத் தனியார் நிறுவனங்களால் செய்து கொடுக்கப்பட்டது என்ற விவரம் தருக?

 யாரும் கும்பாபிஷேகப் பணிகள் செய்வதற்கு ஒப்படைக்கப்படவில்லை. எனவே, தகவல் தர இயலவில்லை.

 நெல்லையப்பர் கோயிலில் பாலாலயம் எந்தத் தேதியில் நடைபெற்றது? அதற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரம் தருக? 

வழக்கறிஞர் பிரம்மாநெல்லையப்பர் கோயிலில் பாலாலயம் 30.11.2017ல் நடந்தது. மேற்படி பாலாலயம் செலவுகள் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பாலாலயம் செலவு விவரம் திருக்கோயில் வசம் கிடையாது. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு மொத்தம் எத்தனை அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன என்ற விவரம் தருக? 

 நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு மொத்தம் 8,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

 கும்பாபிஷேகம் நேர மாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய காரண விவரம் தருக? 

கும்பாபிஷேக நேரம் முதலில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.40 முதல் 5.10 வரை என நிர்ணயம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நேரம் அதிகாலை என்பதால் அனைவராலும் கலந்துகொள்வதில் சிரமம் ஏற்படுவதாகப் பொதுமக்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் கும்பாபிஷேக நேரம் அனைவரும் கலந்துகொள்ளும் விதமாக மாற்றியமைக்க கேட்டுக் கொண்டதன்பேரில் கும்பாபிஷேக நேரத்தை, சம்பந்தப்பட்ட தருமை ஆதினம் அவர்களிடம் கலந்தாலோசித்து மாற்றம் செய்யப்பட்டது 

கும்பாபிஷேகத்துக்கு யாக சாலை அமைக்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரம் தருக?

யாகசாலை உபயதாரால் அமைத்து தரப்பட்டதால் செலவு விவரம் தர இயவில்லை.

திருக்கோயிலில் 2015-18 ம் ஆண்டு வரை என்னென்ன வெள்ளி பொருள்கள் காணாமல் போனதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் ஆண்டு வாரியாக தருக? 

 2015-18ம் ஆண்டு வரை வெள்ளிப் பொருள்கள் காணாமல் போனதாகப் புகார் எதுவும் செய்யப்படவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!