ஜூன் இறுதியில் பொறியியல் தரவரிசை பட்டியில் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 

தரவரிசை

இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழ்நாட்டில் 42 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்காக மூன்று நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 2,000 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த வருடம் மட்டும் மொத்தம் 1, 59,631 பேர் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இது நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்டமாகப் பொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. மேலும், ஜூலை முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!