`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்!’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive | 18 MLAs will be gifted with everything other than ministry, as per Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (18/06/2018)

கடைசி தொடர்பு:23:05 (18/06/2018)

`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்!’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive

18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களும் தினகரன் பக்கம் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் ஒருகட்டமாகவே திருச்சியில் பேசினார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்!’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive

குதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகள், தினகரன் அணியை ஆட்டம் காணவைத்துள்ளது. `18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களும் தினகரன் பக்கம் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் ஒரு கட்டமாகவே திருச்சியில் பேசினார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று திருச்சி வந்திருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசியவர், `அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் வந்து இணைந்தால் பாராட்டுக்குரியது. அ.தி.மு.கவில் இணைவதற்குத் தங்க.தமிழ்செல்வன் விரும்பினால், அவரையும் சேர்த்துக் கொள்வோம். எங்களுடன் வந்து இணைபவர்களுக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழலில், இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுகுறித்து கருத்துக்கூற இயலாது' என்றார். 

'தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களை இவ்வளவு வெளிப்படையாக அழைப்பது ஏன்?' என்ற கேள்வியை அ.தி.மு.கவின் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். ``தினகரனிடம் இருக்கும் அந்த 18 பேரையும் அ.தி.மு.கவுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கான பணியில் சில தூதுவர்கள் ஈடுபட்டுள்ளனர். தினகரனுடன் யாரும் இல்லை என்பதை நிரூபிப்பதுதான், எடப்பாடி பழனிசாமியின் முக்கிய நோக்கம். தங்க.தமிழ்ச்செல்வன் செல்வாக்கால், ஆண்டிபட்டியில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடியும் என நினைக்கிறார் தினகரன். அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், எடப்பாடி பழனிசாமியோ, தி.மு.கவோடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படலாம். `மூன்றாவதாக வரக் கூடிய நபர், அரசியலில் அடிபட்டுப் போவார். நமக்கு அரசியலில் நல்ல இடம் கிடைக்கும்' என்பதுதான் டி.டி.வியின் திட்டம். பொதுவாக, இடைத்தேர்தல் என்பது பெரிய விஷயமே அல்ல. இடைத்தேர்தலை முன்வைத்து அரசியலில் ஒரு சக்தியாக யாரும் வர முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதால் என்ன நடந்துவிட்டது...அந்தத் தேர்தலில் டெபாசிட் இழந்த ஸ்டாலினோடுதான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துகின்றன; அடுத்தகட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கின்றன. தினகரன் பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. அவருக்கு ஆதரவாக இருந்த கருணாஸ்கூட, `அடுத்த தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் தயவு தேவை' என தி.மு.க பக்கம் சாய்ந்துவிட்டார். 

தினகரன்இதை உணர்ந்துதான், ஆண்டிபட்டியில் இடைத்தேர்தல் வந்தால் தனக்கு இன்னொரு இமேஜ் வரும் என அவர் நினைக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனை உயர்த்திக் காட்டும் வகையில் இவ்வாறு நடப்பதை, இதர 17 எம்.எல்.ஏ-க்களில் பலருக்கும் உடன்பாடில்லை. `தங்கம் மட்டும்தான் செல்வாக்கு உள்ளவர் போலவும் மற்றவர்கள் பயந்துபோய் இருப்பதைப் போலவும் ஒரு தோற்றத்தைக் காட்டுவது எந்த வகையில் சரியானது? தினகரன், தன்னுடைய சுயநலத்துக்காக எதையும் செய்வார். இரண்டு அணியும் ஒன்று சேர்ந்தால், விலகிக் கொள்கிறேன் என்றவர், ஏன் இன்னமும் விலகாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் வாழ்க்கையை ஏன் அழிக்க வேண்டும்?' எனத் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் சிலர் கொதிக்கின்றனர். இன்று திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியுள்ளன. 

தினகரன் பக்கம் இருந்து வருவது தொடர்பாக, தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான தேவைகள் என்ன? அ.தி.மு.க பக்கம் வருவதற்கு என்னவெல்லாம் தேவைப்படும் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் தூதுவர்களை நம்பாத தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் சிலர், `உண்மையிலேயே எடப்பாடிதான் விரும்புகிறாரா...இல்லை நீங்களாகவே வந்து கேட்கிறீர்களா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். `நீங்கள் வருவதை எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அவருக்குத் தினகரன் மட்டும்தான் எதிரி. அவரை உள்ளே அனுமதித்துவிட்டால் தேவையில்லாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பார். எந்தச் சூழ்நிலையிலும் அவரை அ.தி.மு.கவுக்குள் அனுமதிக்க மாட்டார் எடப்பாடி. உங்கள் வருகையை முதல்வர் விரும்புகிறார்' எனக் கூறவும்,

`அப்படியானால், அதைப் பற்றி வெளிப்படையாகக் கொஞ்சம் பேசச் சொல்லுங்கள். நம்புகிறோம்' எனக் கூறியதன் தொடர்ச்சியாகவே திருச்சியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில் சட்டரீதியாகச் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நிவர்த்தி செய்து மீண்டும் சேர்த்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். `எம்.எல்.ஏவாக இருந்தால் என்னென்ன பலன்கள் வந்து சேருமோ, அவை அனைத்தும் வந்து சேரும்' எனத் தூதுவர்கள் கூறிவிட்டனர். கூவத்தூர் செட்டில்மென்ட் போல சில விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. `இனியொருமுறை எம்.எல்.ஏவாக மாட்டோம்' என விரக்தியில் இருப்பவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக உள்ளனர்" என்றார் விரிவாக.