சென்னையில் கார் தீப்பிடித்து எரிந்து காண்டிராக்டர் பலி

சென்னை: சென்னையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த காண்ராக்டர் தீயில் கருகி பலியானார்.

அடையாறு சாஸ்திரி நகர் 33வது தெரு அண்ணா பள்ளி அருகே இன்று காலை போலிரோ கார் (பதிவு எண் டி.என்.07, பி.எம். 8287) சாலை ஓரம் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவர் சீட் அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தியாகராயர் நகர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அப்போது டிரைவர் இருக்கையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கருகி கரிக்கட்டையாக காணப்பட்டார்.
 
இதுகு றித்து தகவல் அறிந்ததும் பெசன்ட்நகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவர் யார் என்று காரின் பதிவு எண்ணை வைத்து துப்பு துலக்கினர்.

அப்போது காரில் பிணமாக கிடந்தவர் பெயர் ஆனந்தபிள்ளை (55) என்பதும் அடையாறு சாஸ்திரிநகர் 5வது அவென்யூவில் உள்ள தேவ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

இது பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை கந்தசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பிணமாக கிடந்தது தனது மகன் என்பதை உறுதி செய்தார். உடல் கருகி பலியான ஆனந்தபிள்ளை ரெயில்வே காண்டிராக்டர் ஆவார்.

சமீபகாலமாக தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் ஹ‌ை‌தராபாத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பிய போதுதான் காரில் பிணமாக கிடந்துள்ளார்.

காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி ஆனந்த பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
மேலும் அவரை யாராவது காரில் வைத்து எரித்துக் கொன்றார்களா அல்லது காரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அவரது சாவில் ஏற்பட்டுள்ள மர்மம் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!