நெல்லையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி ரூ.8 லட்சம் மோசடி! | Students file complaint with Nellai collector over coaching center fraud

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (18/06/2018)

நெல்லையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி ரூ.8 லட்சம் மோசடி!

நெல்லையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்துவதாகத் தெரிவித்து மாணவர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்துவதாகத் தெரிவித்து மாணவர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பயிற்சி மையம் நடத்தி மோசடி

நெல்லை சந்திப்பில் ஸ்டார் ரேஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது ஐ.ஏ.எஸ், டி.என்.பி.எஸ்.சி, வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவ மாணவிகளிடம் தலா 10,000 ரூபாய் பெற்று சேர்க்கை நடைபெற்றது. இந்த மையத்தில் 2 மாதங்கள் வகுப்புகள் நடந்துள்ளன. இங்கு 80 மாணவர்கள் சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்தார்கள். 

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த மையம் திடீரென மூடப்பட்டது. அத்துடன், அதை நடத்தி வந்த பொறுப்பாளர்களும் தலைமறைவாகிவிட்டனர். பணத்தைக் கட்டி பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவர்களால் பயிற்சி பெற முடியாத நிலைமை ஏற்பட்டது. இதுபற்றி அந்தப் பயிற்சி மையப் பொறுப்பாளர்களிடம் கேட்க அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டபோதிலும் தொடர்புகொள்ள இயலவில்லை. 

அதனால், பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு நுழைய போலீஸார் அனுமதிக்க மறுத்ததால், அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த மாணவர்கள், தாங்கள் அந்த மையத்தில் செலுத்திய கட்டணத் தொகையைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் பணத்தை மோசடி செய்த பயிற்சி மையம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.