`ரூ.1,000 கோடி கொள்ளையடிச்சிட்டீங்க; இனி விடமாட்டேன்!' - வைரலாகிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆடியோ | former ADMK MLA controversial audio goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (18/06/2018)

கடைசி தொடர்பு:12:55 (19/06/2018)

`ரூ.1,000 கோடி கொள்ளையடிச்சிட்டீங்க; இனி விடமாட்டேன்!' - வைரலாகிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆடியோ

அ.தி.மு.க எம்.எல்.ஏவும், ஒன்றியச் செயலாளரும் சேர்ந்து ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

திருச்சி, மருங்காபுரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமி என்பவர், விவசாய சங்கத் தலைவர் அப்துல்லா என்பவருடன் பேசிய அந்த ஆடியோவில், ``நான் துணை முதல்வர் சிபாரிசு மூலம் 7 வீடு வாங்கினேன். அந்தப் பட்டியலை மாற்ற ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் முயற்சி செய்கிறார். அதான் கோபத்துல, ஒன்றியச் செயலாளருக்கே போன்போட்டு, அசிங்கமாகத் திட்டியதுடன், நீ எங்க இருக்கன்னு சொல்லு. நான் நேரில் வர்றேன். மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திரசேகரும், நீயும் சேர்ந்து 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து இருக்கீங்க. இரண்டு பேரைக் கொலை செய்தவன்தான நீ. உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன்” என அந்த ஆடியோ நீளுகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி

``துணைமுதல்வரிடம் சிபாரி பெற்று, நான் கொடுத்த பட்டியலை பார்த்த கலெக்டர், அதனை நிறைவேற்றிட பி.டி.ஓ.வுக்கு அனுப்பினார். இதைத் தெரிந்துகொண்ட ஒன்றியச் செயலாளர், பி.டி.ஓ வைக் கூப்பிட்டு மிரட்டியிருக்காங்க. அதனால் பி.டி.ஓ பயந்து மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பி.டி.ஓ.விடம், கலெக்டர் சொன்னா வீடு கொடுப்பீங்களா, `கலெக்டரையே மாத்திடுவோம் என மிரட்டியிருக்காங்க. இவர்களுக்கு மணப்பாறை பகுதியில் ராத்திரி பகலா மணல் அள்ளுறாங்க. அதனைக் கண்டுக்கக் கூடாதுனு பெண் தாசில்தாருக்கு இரண்டுநாள்களுக்கு முன்னாள், காவல்காரன்பட்டி அன்பரசன் என்பவர் மூலம் வெள்ளி குத்து விளக்கும், 1 லட்சம் பணமும் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதேபோல் தாசில்தாரை கவனிச்சிட்டு, ராத்திரி பகலா மணல் கொள்ளை நடக்கிறது. இதை கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு செல்லணும். இனி விடமாட்டேன். புதிதாகப் போடும் சாலை எல்லாம் தரமில்லாமல் போடுறாங்க. அதை மீடியாக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என்கிறார். இந்தத் தகவல் வாட்ஸ் அப் போன்ற  சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இந்த ஆடியோ குறித்து சின்னசாமியிடம் கேட்டபோது, ஒன்றியச் செயலாளர் பற்றி பேசியது உண்மைதான் என்று கூறியவரிடம், ஆடியோவில் இருப்பது உங்கள் குரல்தானே என்று கேட்டபோது, நான் மீட்டிங்கில் இருக்கிறேன். திரும்ப உங்களை குப்பிடுகிறேன்" என்று கூறி போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க