வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/06/2018)

கடைசி தொடர்பு:22:30 (18/06/2018)

தங்க தமிழ்ச்செல்வன் எடுத்தது தனிப்பட்ட முடிவு! தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பேட்டி

தகுதி நீக்க வழக்கின் அடுத்தகட்டம் பற்றி துணைப் பொதுச் செயலாளர் தினகரன்தான்

``தகுதி நீக்க வழக்கின் அடுத்தகட்டம் பற்றி துணைப் பொதுச் செயலாளர் தினகரன்தான் முடிவு செய்வார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க தங்க தமிழ்ச்செல்வன் எடுத்துள்ளது அவரின் தனிப்பட்ட முடிவு. கட்சித் தலைமை முடிவு அல்ல, என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சாத்தூர் எஸ்.ஜி .சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சுப்ரமணியன்

இன்று சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், ''வழக்கை வாபஸ் வாங்க மீதம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அ.தி.மு.க-வை மீட்கத்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் தொடங்கினார். கட்சியைவிட்டு நீக்கும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்தாம்'' என்றார்,

`தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தால் பாராட்டுக்குரியது' என்ற முதல்வரின் கருத்து பற்றி கேட்டதற்கு, ''18 சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் அணியில் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. தகுதி நீக்க வழக்கின் அடுத்தகட்டம் பற்றி  துணைப் பொதுச் செயலாளர் தினகரன்தான் முடிவு செய்வார். இடைத்தேர்தல் வந்தால் நான் மீண்டும் போட்டியிடுவேன். சின்னம் பற்றி தேர்தல் நேரத்தில் தினகரன் முடிவு செய்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் முடிவுக்குதான் அனைவரும் கட்டுப்படுவோம். 18 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க