போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை..! சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு

 ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது நிலமோசடி  தடுப்புப் பிரிவு போலீஸôர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது நிலமோசடி  தடுப்புப் பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் நிலமோசடி தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒளிமுகம்மது. அவரின் மனைவி வைசியது ரகுமா. இருவரும் தற்சமயம் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிவஞானபுரத்தில் இவர்களுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 50 சென்ட் இடத்தை ராமநாதபுரம் சேட் இப்ராகிம் நகரைச் சேர்ந்த ராமையா என்பவர் போலியாக அவர் பெயருக்கு பவர் பத்திரம் தயாரித்துள்ளார். பின்னர் அதை ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த அங்குச்சாமி மனைவி தமிழ்ச்செல்வி, சிவஞானபுரத்தைச் சேர்ந்த மோகன், ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகராஜா, வாணி கிராமத்தில் வசிக்கும் செய்யது இப்ராஹிம், ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த தேவிகா ஆகிய 5 பேருக்கும் விற்றுள்ளார். 

இதுகுறித்து வைசியது ரகுமாவுக்கு தெரிய வந்ததையடுத்து அவர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிப்பிரியா போலி ஆவணம் தயாரித்தது தொடர்பாக ராமையா மற்றும் மோசடி நிலத்தை வாங்கிய 5 பேர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும், நில விற்பனைக்கு உடந்தையாக இருந்தும், மோசடி பத்திரத்தை முறையாக கவனிக்காமல் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும் அப்போது பணியில் இருந்த வெளிப்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் மீதும் இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!