பள்ளியில் கையாடல் செய்தவர்களைக் கண்டுகொள்ளாதக் கல்வித்துறை..! மதுரை ஆட்சியரிடம் புகார்

அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளியில் 43 லட்ச ரூபாயை கையாடல் செய்த வழக்கில்

அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளியில் 43 லட்ச ரூபாயை கையாடல் செய்த வழக்கில் பள்ளியின் முன்னாள் நிர்வாகி மற்றும் பள்ளி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல் கல்வித்துறை தாமதப்படுத்தி வருவதாக மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் கையாடல்
கோப்புப்படம்

இதுசம்பந்தமாக மதுரையிலுள்ள 'அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி பரிபாலன சபை' தலைவர் செல்வகணேஷ், செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் வன்னியபெருமாள் பேசும்போது, 'சமுதாய நலனுக்காகவும், ஏழை எளிய பிள்ளைகளின் கல்விச் சேவைக்காகவும் இந்தப் பள்ளி கீரைத்துறையில் தொடங்கப்பட்டது. இப்பள்ளிக்கு.கடந்த பிப்ரவரி 18-ம் தேதி புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களின் பணம் 43 லட்ச ரூபாயை முந்தைய செயலாளர் சிவகுமாரும், பள்ளி ஊழியர் சர்மிளிபழனிக்குமாரும் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் விசாரணை முடிவில் அவர்கள் இருவர் மீதும் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இருவரும் பள்ளியின் நடவடிக்கைகளில் இன்றுவரை ஈடுபட்டு மீண்டும் மாணவ மாணவிகளின் பணத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள். அவர்கள் மீது மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள்  உடனே நடவடிக்கை எடுத்து பள்ளியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்'' என்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!