கடலூரில் சூறைக் காற்று..! 300 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் | Heavy storm in Cuddalore: Banana trees damaged

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:08:56 (19/06/2018)

கடலூரில் சூறைக் காற்று..! 300 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. அதே நேரத்தில் கடலூர் அருகே உள்ள மலைகிராமங்களில் சூறாவளி காற்று வீசியது. இதில் ராமபுரம், அன்னவல்லி, வி.காட்டுப்பாளையம், வெள்ளைகரை, கொடுக்கன்பாளையம் ,ஒதியடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரம் முறிந்து விழந்தன

கடலூர் பகுதியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் நேற்று வீசிய சூறைக் காற்றில் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி, மின்னலுடன், சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.

அதே நேரத்தில் கடலூர் அருகே உள்ள மலைக் கிராமங்களில் சூறாவளிக் காற்று வீசியது. இதில் ராமபுரம், அன்னவல்லி,  வி.காட்டுப்பாளையம், வெள்ளைகரை, கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரம் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

கடலூர்

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறைக் காற்றுடன் மழை பெய்தது. சூறைக் காற்றால் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. கடன் வாங்கி விவசாயம் செய்தோம். எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடனுக்கு எப்படி வட்டிகட்டுவது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

நேற்று பலத்த சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் வாழைத்தார்கள், வாழைப் பிஞ்சுகள்  உள்ளிட்ட அனைத்தும் சேதமானது. இந்தப் பாதிப்பில் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் சுமார் ரூ.2 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்து சேதமான வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.