வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:14:47 (20/06/2018)

டிரெயல்ஹாக்குக்கு முன்பே வந்துவிட்டது பெட்ராக்... இது ஸ்பெஷல் எடிஷன் ஜீப்!

ஜீப் தனது காம்பஸ் எஸ்யூவியின் புதிய லிமிடட் எடிஷன் மாடலான பெட்ராக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ரூ.17.53 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் கார் காம்பஸின் ஸ்போர்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. சில எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் மாற்றங்களுடன் வந்துள்ள பெட்ராக் எடிஷன், இந்தியாவில் 25,000 காம்பஸ் விற்பனையானதைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது.

ஜீப் காம்பஸ் பெட்ராக்

வெளிப்புற மாற்றமாக பெட்ராக் கார் Vocal White, Minimal grey மற்றும் Exotica Red எனும் மூன்று புதிய நிறங்களில் வருகிறது. கறுப்பு நிற 16 இன்ச் அலாய் வீல், கறுப்பு ரூஃப் ரெயில் மற்றும் டோர்களில் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் வருகின்றன. காரின் உள்புறத்தில் பெட்ராக் என்று அச்சிடப்பட்ட சீட் கவர்கள், புதிய ஃப்ளோர் மேட் மற்றும் ரிவர்ஸ் கேமாராவுடன் கூடிய 5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட சிஸ்டம் வருகிறது. 

இன்டீரியர்

ஸ்போர்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக், ஸ்டெபிளிட்டி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகள் ஸ்டான்டர்டாக வந்துவிடுகிறது. பெட்ராக் மாடல் 173bhp பவர் தரக்கூடிய 2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியுடன் மட்டுமே வருகிறது. ஸ்போர்ட் வேரியன்ட்டைவிட தோராயமாக 1 லட்சம் விலை அதிகமாகவும், அடுத்த வேரியன்ட்டான லாங்கிடியூட்டைவிட 1 லட்சத்துக்கும் அதிகமாக விலைகுறைவாகவும் வருகிறது பெட்ராக்.

ஃபியட் நிறுவனம் தனது ஜீப் பிராண்ட்டை இந்தியாவில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. சமீபத்தில், இந்தியாவில் ஜீப் களமிறக்கப்போகும் கார்களை பற்றி கூறியவற்றை லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்.