வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (19/06/2018)

கடைசி தொடர்பு:11:20 (19/06/2018)

சில இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இனி வராது.. உங்கள் மொபைல் இந்தப் பட்டியலில் இருக்கிறதா?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் சில இயங்குதளங்களின் பட்டியலை வெளியிட்டு இந்த  2018-ம் ஆண்டின் இறுதியோடு அந்த இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது . அந்தப் பட்டியலில் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் இயங்குதளங்களால்தான் இனி வெளியிடப் போகும் அப்டேட்களை சப்போர்ட் செய்ய முடியாமல் உள்ளது என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். அந்தப் பட்டியலில் உள்ள சில இயங்குதளங்கள் தற்போதே வாட்ஸ்அப்பின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு விட்டன என கூறப்படுகிறது . ஒரு வேளை நீங்கள் ஆன்ட்ராய்டு பயனர் என்றால் பழைய ஆன்ட்ராய்டு வெர்ஷனை அப்டேட் செய்துகொண்டால் உங்களால் மேலும் வாட்ஸ்அப்பின்  அப்டேட்களை பெறமுடியும் எனவும் அறிவித்திருக்கிறது . 

வாட்ஸ் அப்பின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட இயங்குதளங்கள் :

*ஆன்ட்ராய்ட்  2.3.3 க்கு முந்தைய வெர்ஷன்கள்

*வின்டோஸ் போன்  8.0 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள்

*ஐபோன் 3 GS/ஐ .ஓ .எஸ்  6

*நோக்கியா ஸிம்பையன்   S60

*ப்ளாக்பெர்ரி  OS மற்றும் ப்ளாக்பெர்ரி  10

இந்த ஆண்டின் இறுதியோடு வாட்ஸ்அப் சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருக்கும் இயங்குதளங்கள் :

*நோக்கியா  S40

*ஆன்ட்ராய்டு 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள்  (2020 பிப்ரவரி 1 வரை செயல்படும்)

*ஐ .ஓ .எஸ்  7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள்  (2020 பிப்ரவரி 1 வரை செயல்படும்)


புதிய வெர்ஷன்களை அப்கிரேடு செய்துகொண்டால் வாட்ஸ்அப் வசதிகளைப் பெறும் இயங்குதளங்கள் :

*ஆன்ட்ராய்டு  OS 4.0 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்

*ஐபோன்  8 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்

*வின்டோஸ் போன்  8.1 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்கள்.