கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் பாய்ந்தது... பறிபோன 6 குழந்தைகளின் உயிர்

பீகாரில் குழந்தைகளுடன் பயணித்த கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் பாய்ந்தது

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரில் சில குழந்தைகள் பயணித்துள்ளனர். கார் தரபாடி என்ற கிராமத்தில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தை மட்டும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பறிபோன 6 குழந்தைகளின் உயிர்

``சில குழந்தைகளுடன் ஒரு கார் மிகவும் வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் மரத்தில் வேகமாக மோதி அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது '' என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

காரில் எத்தனை பேர் பயணம் செய்தனர். அவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!