'இதைப் பின்பற்றாவிட்டால் தண்டனை'- அதிகாரிகளைப் பதறவைத்த அரசின் அறிக்கை

எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என ஹரியானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகாரிகள்

ஹரியானா அரசு சார்பில் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'மாநிலத்தில் உள்ள எம்.பி-க்களோ அல்லது எம்.எல்.ஏ-க்களோ அரசு அலுவலகங்களுக்கு வரும்போது அரசு அதிகாரிகள் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் வைத்து மரியாதை செலுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் மூலமும் மெயில் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றத் தவறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோன்று, பொது நிகழ்ச்சிகளில் எம்.பி-க்கள் கலந்துகொள்ளும்போது அங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் அனைத்து முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற உத்தரவு கடந்த வருடம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!